Members Concern:
அனைவருக்கும் காலை வணக்கம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இனி மின்வாரிய பணிகள், மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஆவின் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேர்வாணையம் மூலமாக மட்டுமே ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மின்வாரிய பணிகளில் உதவி பொறியாளர் பணியிடம் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இனி வரும் காலங்களில் தேர்வாணையம் மூலம் ஆட்கள் தேர்வு தேர்வு செய்யப்பட்டால் தேர்வாணைய விதிகளின்படி குரூப் சி பணிகள் அதாவது 18 ஆயிரத்து 500 சம்பள விகிதத்தில் உள்ள பணிகள் மட்டும் 5 சதவீதம் வழங்கப்படும். உதவி பொறியாளர் உள்ளிட்ட எந்த பணியும் தேர்வாணையத்தின் மூலம் முன்னுரிமை வழங்கப்படாது எனவே ஏற்கனவே நமக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை சரியாக பயன்படுத்தி இனி வரும் காலங்களிலும் இதே நிலை தொடர வேண்டும் என தேர்வாணையத்தை வலியுறுத்த வேண்டும் நன்றி